தமிழில் பூ படத்தில் அறிமுகமாகி சென்னையில் ஒருநாள், தனுஷ் ஜோடியாக மரியான், கமல்ஹாசனுடன் உத்தம வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான மலையாள நடிகையான பார்வதி ‘தங்கலான்’ படத்தில் விக்ரமுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
‘தங்கலான்’ படப்பிடிப்பில் தீவிரமாக பங்கேற்று நடித்தும் வந்தார். தற்போது அவர் நடிக்க வேண்டிய காட்சிகளை முழுமையாக நடித்து முடித்து கொடுத்து விட்டு வெளியேறி உள்ளார்.
இதுகுறித்து பார்வதி வலைத்தளத்தில் நெகிழ்ச்சியோடு வெளியிட்டுள்ள பதிவில், “வேகமாக செல்லும் காரின் பிரேக்கை திடீரென்று பிடித்து நிறுத்துவது போன்று தற்போது இந்த பயணம் முடிவுக்கு வந்து இருக்கிறது. எப்போதாவது இது முடியத்தான் வேண்டும். பணம், புகழை தாண்டி பணி செய்த திருப்தியை கொடுத்துள்ளது.
எனக்கு திருப்தியான படம். உங்களைப்போல் நானும் இந்த படத்தை திரையில் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார். தங்கலான் படத்தை பா.ரஞ்சித் இயக்கி உள்ளார். கோலார் தங்கவயலில் பணி செய்த தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ளது.
NEWS EDITOR : RP