சென்னை, சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் வரை செல்லும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் இன்று இயக்கப்படுகிறது. இந்த ரெயில் இரவு 11 மணிக்கு புறப்பட்டு 26-ந்தேதி காலை 8 மணிக்கு தன்பாத் சென்றடைகிறது. 2-ம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட 22 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.
வட மாநிலத்தவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக இந்த சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. முன்பதிவு எக்ஸ்பிரஸ் ரெயில்களில் வட மாநிலத்தவர்கள் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் முன்பதிவு இல்லாமல் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
NEWS EDITOR : RP
Please follow and like us: