புதுடெல்லி, பால்பொருட்கள் தயாரிக்கும் அமுல் நிறுவனத்தின் விளம்பரத்தில் வரும் கார்ட்டூன் சிறுமியை உருவாக்கிய சில்வெஸ்டர்டா குன்ஹா தனது 80-வது வயதில் காலமானார். இவர் உருவாக்கிய இந்த கார்ட்டூன் சிறுமியை வைத்து வரும் விளம்பரங்கள் மக்களிடையே அமுல் நிறுவனத்திற்கு மிகுந்த வரவேற்பை பெற்றுத்தந்தது.
உலகின் மிக வெற்றிகரமான விளம்பரங்களில் இதுவும் ஒன்று. சில்வெஸ்டர் டகுன்ஹா பல விளம்பரங்களை வடிவமைத்துள்ளார். ஆனால், அமுல் நிறுவனத்திற்கு அவர் உருவாக்கிய அமுல் கேர்ள் விளம்பரம் மூலம் அவருக்கு உண்மையான அங்கீகாரம் கிடைத்தது.
1980 மற்றும் 90களில் வந்த அமுல் விளம்பரத்தை பார்த்து ரசிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதிலும் குறிப்பாக அந்த விளம்பரங்களில் வரக்கூடிய கார்ட்டூன் சிறுமி மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது
NEWS EDITOR : RP