பிரதமர் மோடிக்கு வெள்ளை மாளிகையில் தடபுடலாக ரெடியாகும் சைவ உணவு..!!

Spread the love

அமெரிக்காவில் 4 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, 2வது நாளாக வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். வெள்ளை மாளிகை வந்த பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் பைடன், அவரது மனைவி ஜில் டைபன் ஆகியோர் வரவேற்றனர். அப்போது பிரதமர் மோடிக்கு அதிபர் பைடன் பழமையான புத்தகம் மற்றும் கோட்டக் கேமராவை பரிசாக அளித்தார். ராபர்ட் ஃப்ரோஸ்டின் எழுதிய கவிதையின் முதல் பதிப்பை பிரதமர் மோடிக்கு ஜில் பைடன் பரிசாக வழங்கினார்.

இதனை தொடர்ந்து, ஜில் பைடனுக்கு பிரதமர் மோடி 7.5 கேரட் பச்சை வைரத்தை பரிசாக வழங்கினார். மேலும், அதிபர் பைடனுக்கு சந்தனப் பெட்டி மற்றும் 1937ஆம் ஆண்டு ஸ்ரீபுரோஹித் சுவாமியுடன் இணைந்து WB Yeats எழுதிய இந்திய உபநிடதங்களின் ஆங்கில மொழிபெயர்ப்பை பரிசாக வழங்கி பிரதமர் மோடி அன்பை பரிமாறிக் கொண்டார்.

இதனையடுத்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் இணைந்து வழங்கும் அரசு விருந்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார். பிரதமர் மோடிக்கு சைவ உணவுகள் மிகவும் பிடிக்கும் என்பதால், அதற்காக வெள்ளை மாளிகையில் பிரத்யேக உணவுகள் தயாரிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் வெள்ளை மாளிகை ஊழியர்களை அழைத்து, மிகவும் ஆச்சர்யமூட்டும் வகையில், சுவையான சைவ உணவுகளை செய்யுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு அளிக்கப்போகும் இரவு உணவு பற்றி ஜில் பைடன் அமெரிக்க ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார். அந்த பேட்டியில் விருந்தினர்கள் தெற்குப் புல்வெளியைக் கடந்து ஒவ்வொரு மேசையிலும் குங்குமப்பூ நிறப் பூக்களுடன், பசுமையாக காட்சியளிக்கும் ஒரு பெவிலியனுக்குள் செல்வார்கள்… அங்கு இந்தியக் கொடியின் வண்ணங்கள்… நமது தேசத்தின் சின்னமான இயற்கைக்காட்சிகள் மற்றும் சின்னங்கள்… நமது ஜனநாயகம் மற்றும் வரலாறு… ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

“இந்த ஆக்கப்பூர்வமான அரசு பயணத்தின் மூலம், உலகின் பழமையான மற்றும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளை நாங்கள் ஒன்றிணைக்கிறோம். பல வருட உறவுகளை வலுப்படுத்திய பிறகு, உலகளாவிய சவால்களை நாங்கள் கூட்டாகச் சமாளிப்பதால், அமெரிக்கா-இந்தியா கூட்டாண்மை ஆழமானது மற்றும் விரிவானது என்று அவர் கூறினார். மேலும் இரவு உணவிற்குப் பிறகு, கிராமி விருது வென்ற ஜோசுவா பெல் மற்றும் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தெற்காசிய அகப்பல்லா குழுவான பென் மசாலா குழு ஆகியவற்றின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.

மோடிக்கு தயாராகும் மெனுவில் என்ன இருக்கிறது?

மோடி ஒரு சைவ உணவு உண்பவர் என்ற உண்மையை மனதில் வைத்து, வெள்ளை மாளிகையின் ஊழியர்களுடன் இணைந்து ‘அழகான சைவ உணவுப் பட்டியலை’ உருவாக்க, தாவர அடிப்படையிலான உணவு வகைகளில் நிபுணத்துவம் பெற்ற செஃப் நினா கர்ட்டிஸிடம் கேட்டுக்கொண்டதாக ஜில் பைடன் கூறினார். விருந்தினர்கள் விரும்பினால் மீன் வகைகளை கூட ஆர்டர் செய்து சாப்பிடலாம் என்றும் ஜில் பைடன் தெரிவித்தார்.

NEWS EDITOR : RP

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram