திருவண்ணாமலை தூசி தூசி அருகே கர்ப்பிணியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ஒருவர் கைது செய்யப்பட்டார். 3 பேர் தலைமறைவாகி விட்டனர். தூசி அருகே உள்ள மாங்கால் காலனியைச் சேர்ந்த எல்லப்பன் மகள் திவ்யா. கங்காதரன் மகன் பிரவீன். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் இவர்களது திருமணம் நடந்த பிறகு இரு குடும்பத்தினரிடையே முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் கங்காதரன் மகள் பிரீத்தா பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் எல்லப்பன் மகன்கள் பிரபு பிரசாந்த் பிரபாகரன் உறவினர் அரவிந்த் குமார் இவர்கள் 4 பேரும் சேர்ந்து பிரித்தாவை அசிங்கமாக வார்த்தைகளால் திட்டி அடித்து இரும்புராடால் கொலை செய்வதாக சொல்லி மிரட்டியதாக தூசி போலீஸில் பிரித்தா புகார் கொடுத்தார். சப்-இன்ஸ்பெக்டர் அஜித்குமார் வழக்குப் பதிவு செய்து பிரபு என்பவரை கைது செய்து தலைமறைவான உள்ள மூன்று பேரை தேடி வருகின்றனர்.
NEWS EDITOR : RP