திருவண்ணாமலை மாவட்டத்தில் சாராய வேட்டை நடவடிக்கையில் ஈடுபட்ட போலீசார் ஒரே மாதத்தில் 983 பேரை கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை திருவண்ணாமலை மாவட்டத்தில் சாராய வேட்டை நடவடிக்கையில் ஈடுபட்ட போலீசார் ஒரே மாதத்தில் 983 பேரை கைது செய்துள்ளனர். சாராய உயிரிழப்புகள் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளசாராயம் குடித்ததால் பலர் இறந்த சம்பவத்தை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் தனிப்படை அமைக்கப்பட்டு கடந்த மே மாதம் 14-ந் தேதி முதல் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த சோதனையில் நேற்று முன்தினம் வரை அதாவது ஒரே மாதத்தில் மூலம் 1038 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 983 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைதானவர்களிடம் இருந்து 1,113 லிட்டர் மதுபான பாட்டில்களும், 16 ஆயிரத்து 700 லிட்டர் கள்ளச்சாராயம் ஊறலும், 16,127 லிட்டர் கள்ளச்சாராயம், 2010 லிட்டர் எரிச்சாராயம் மற்றும் 64 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கள்ளச்சாராய வழக்கு தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று முன்தினம் வரை 29 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு உள்ளனர்.
தொடர் சோதனைகள் இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு கூறுகையில், ”திருவண்ணாமலை மாவட்டத்தில் சாராய ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுபோன்ற கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள். இது போன்ற தொடர் சோதனைகள் தொடர்ந்து நடைபெறும்” என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
NEWS EDITOR : RP