சென்னை, மின்சார ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நீண்ட காலமாக வைத்து வருகின்றனர். ஆனால் இந்த கோரிக்கைகளை தமிழ்நாடு மின் வாரியம் இதுவரை நிறைவேற்றியது இல்லை. இந்த நிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம் நடத்த மின்வாரிய ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள போராட்டத்தில் பங்கேற்கும் ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என்று ஊழியர்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் நாளை பணிக்கு வராத ஊழியர்களின் விவரங்களை தலைமைக்கு அனுப்ப மண்டல பொறியாளர்களுக்கு மின்வாரியம் ஆணையிட்டுள்ளது.
ஊழியர்கள் போராட்டத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எந்த இடத்திலும் மின் தடை ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
NEWS EDITOR : RP