அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு அதிகாலை 5.15 மணிக்கு தொடங்கிய அறுவை சிகிச்சை தற்போது நிறைவடைந்துள்ளது. சென்னை, அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் 5 மணி நேரமாக மேற்கொள்ளப்பட்டு வந்த பைபாஸ் அறுவை சிகிச்சை தற்போது நிறைவு பெற்றுள்ளது. அதிகாலை 5.15 மணிக்கு தொடங்கிய அறுவை சிகிச்சை தற்போது நிறைவடைந்துள்ளது. மருத்துவர் ரகுராமன் தலைமையிலான மருத்துவக்குழு அவருக்கு அறுவை சிகிச்சை செய்தனர்.
அறுவை சிகிச்சைக்கு பிறகு செந்தில் பாலாஜி தற்போது மயக்க நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். செந்தில் பாலாஜிக்கு அளித்த சிகிச்சை, உடல்நிலை குறித்து விரைவில் மருத்துவ அறிக்கை வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
காவேரி மருத்துவமனையின் 7-வது தளத்தில் ஸ்கை-வியூ என்ற அறையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அமலாக்கத்துறையின் காவல் முடிய 3 நாட்கள் உள்ளநிலையில் தற்போது செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பின் 3 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவிலும், 7 நாட்கள் மருத்துவ கண்காணிப்பிலும் இருப்பார் என கூறப்படுகிறது
செந்தில்பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றதையொட்டி, சென்னை, காவிரி மருத்துவமனையில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
NEWS EDITOR : RP