நாளையும் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை, சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நாளையும் கனமழை தொடரும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், கனமழை எதிரொலியாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், கனமழை தொடரும் என வானிலை மையம் கூறியுள்ளதால், நாளையும் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விடுமுறையை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், சென்னை உட்பட பல்வேறு இடங்களில் நள்ளிரவு பெய்த கனமழை ஆங்காங்கே தேங்கியிருந்தது. ஆனால் தற்போது அதெல்லாம் சரி செய்து தண்ணீர் அக்கற்றம் செய்யப்பட்டது. அந்த வகையில், பள்ளி வளாகங்களில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், விருதுநகர், குமரி ஆகிய 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
NEWS EDITOR : RP