சென்னை,
சென்னை பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இளைஞருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு தாஸ் என்பவர் பள்ளி மாணவியை, கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த நிலையில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த தாஸ் என்பவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு இழப்பீடாக ரூ.7 லட்சம் வழங்கவும் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
NEWS EDITOR : RP
Please follow and like us: