மழை பாதிப்புகள் குறித்த புகார்களை 1913 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் ~ சென்னை மாநகராட்சி..!!

Spread the love

சென்னை, சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. பெரம்பூர், புளியந்தோப்பு, பட்டாளம், வேப்பேரி, கோயம்பேடு, கிண்டி கத்திபாரா, ஓ.எம்.ஆர்., திருமங்கலம், தரமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. ஒருநாள் மழைக்கே பல பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.

தண்ணீர் தேங்கி நின்ற பகுதிக்கு மாநகராட்சி, குடிநீர் வாரிய அதிகாரிகள் சென்று அதனை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 44 இடங்களில் தேங்கிய மழைநீர் வெளியேற்றப்பட்டது. 163 இடங்களில் வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல பகுதிகளில் இருள் சூழ்ந்து காணப்பட்டன. பகலிலேயே வாகன ஓட்டிகள் விளக்குகளை பயன்படுத்தி சென்றன.

இந்த நிலையில், சென்னையில் மழை பாதிப்புகள் குறித்த புகார்களை 1913 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. குடிநீர் வழங்கல் கழிவுநீர் அகற்றும் தொடர்பான புகார்களுக்கு 044 4567 4567 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். குடிநீர் வாரியத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1916ஐ மக்கள் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் யாரும் மரங்கள், மின்கம்பங்களுக்கு அருகில் நிற்க வேண்டாம் என்றும் சென்னையில் இதுவரை பெரிய அளவுக்கு மழை பாதிப்பு இல்லை… தாழ்வான பகுதிகளை கண்காணிக்க சென்னை மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

NEWS EDITOR : RP

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram