நைபிடா, மியான்மரில் தெற்கு கடலோர பகுதியருகே இன்று காலை 7.10 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகி உள்ளது.
இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. எனினும் இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட பிற பாதிப்பு விவரங்கள் அடங்கிய தகவல்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.
NEWS EDITOR : RP
Please follow and like us: