மாம்பழம் பறித்ததில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். ராஞ்சி, உத்தரகாண்ட் மாநிலம் பஹூர் மாவட்டம் மகேஷ்பூர் அருகே கணேஷ்பூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒரு மா மரத்தில் சில மாம்பழம் பறித்துள்ளனர்.
இதனால், இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. நேற்று இரவு கிராமத்தில் இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். இந்த மோதலில் ஒரேகுடும்பத்தை சேர்ந்த டேவிட்ஹன் முர்மு, வஹில் முர்மு (வயது 30) ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் மோதல் நடந்த கிராமத்திற்கு விரைந்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மோதலில் ஈடுபட்ட பெரும்பாலானோர் தலைமறைவானதால் அவர்களை தேடும் பணியை துரிதப்படுத்தியுள்ளனர்.
NEWS EDITOR : RP