கர்நாடக அரசு பஸ்சில் நூதன முறையில் கடத்தப்பட்ட 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. வேலூர் பேரணாம்பட்டு கர்நாடக அரசு பஸ்சில் நூதன முறையில் கடத்தப்பட்ட555கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. பேரணாம்பட்டு அருகே உள்ள தமிழக எல்லை பத்தலப்பல்லி சோதனை சாவடி வழியாக ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வேலூர் மாவட்ட பறக்கும் படை தாசில்தார் விநாயகமூர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்ததது.
நேற்று காலை பத்தலப்பல்லி சோதனை சாவடி பகுதியில் பறக்கும் படை தாசில்தார் விநாயகமூர்த்தி தலைமையில் அதிகாரிகள் குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர்.
அப்போது வேலூரிலிருந்து கர்நாடக மாநிலம் கே.ஜி.எப் நோக்கி சென்ற கர்நாடக மாநில பஸ்சை சோதனையிட்டனர் இந்த சோதனையில் நூதன முறையில் வெளிமார்க்கெட் அரிசி பைகள் போன்று தைக்கப்பட்டிருந்த 15 மூட்டைகள், மற்றும் பிளாஸ்டிக் பைகளில் 8 மூட்டைகள் என மொத்தம் 555 கிலோ எடை கொண்ட 23 ரேஷன் அரிசி மூட்டைகள் கர்நாடக மாநிலத்திற்கு கடத்த முயன்றது தெரிய வந்தது.
இதனையடுத்து பறக்கும் படையினர் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். இவற்றின். மதிப்பு ரூ 5 ஆயிரத்து 550 ஆகும். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை குடியாத்தம் நுகர் பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டன. இது தொடர்பாக பறக்கும் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
NEWS EDITOR : RP