பார்டர் கவாஸ்கர் டிராபி என்பது இந்தியாவிற்கு ஆஸ்திரேலியாவிற்கும் இடையே விளையாடப்படும் ஒரு சர்வதேச டெஸ்ட் தொடர் ஆகும் . இந்த தொடருக்கு புகழ்பெற்ற முன்னாள் கேப்டன்களான ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டர் மற்றும் இந்தியாவின் சுனில் கவாஸ்கர் ஆகியோரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது . இது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் எதிர்கால சுற்றுப்பயணங்கள் வழியாக விளையாடப்படுகிறது .
மார்ச் 2023 நிலவரப்படி , 2023 தொடரில் ஆஸ்திரேலியாவை 2-1 என தோற்கடித்து கோப்பையை இந்தியா தக்க வைத்துக் கொண்டது . ஒரு தொடர் டிரா செய்யப்பட்டால், கோப்பையை வைத்திருக்கும் நாடு அதைத் தக்க வைத்துக் கொள்ளும்.இறுதி போட்டியில் 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றியது.
இதற்கிடையே வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி நாடு திரும்பிய பின்னர், ஆஸ்திரேலிய அணியுடன் பார்டர் கவாஸ்கர் கோப்பையை எதிர்கொள்ள தயாரானது. அப்போது இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது மனைவியிடம் நடத்திய கலந்துரையாடலை தற்போது பகிர்ந்துள்ளார்.
முழங்கால் வலியால் அவஸ்தைப்பட்டு வரும் அஸ்வின், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரே தனது கடைசி தொடராக இருக்கக் கூடும் எனவும், தனது ஆக்ஷனை மாற்றவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
NEWS EDITOR : RP