அடிக்கல் நாட்டிய 15 மாதங்களில் இன்று திறப்பு விழா காண்கிறது ‘கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த மருத்துவமனையை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு திடீரென வேறு சில காரணங்களால் வர முடியவில்லை என்று கூறவே, பின்னர் அவரின் அந்த பயண திட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இதனை தொடர்ந்து, ‘கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை இன்று மாலை 6 மணிக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்க உள்ளார்.
இது குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “அடிக்கல் நாட்டிய பதினைந்தே மாதங்களில் இன்று திறப்பு விழா காண்கிறது ‘கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை’. எங்களின் நோக்கங்களை நிறைவேற்றியுள்ளோம்” என பதிவிட்டுள்ளார்.
NEWS EDITOR : RP