நடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் புதிய மல்டிபிளக்ஸ் திரையரங்கம் ஒன்றை ஏசியன் சினிமாஸ் நிறுவனத்துடன் உடன் இணைந்து தொடங்கப் போவதாக ஏசியன் சினிமாஸின் முதன்மை செயல் அலுவலர் சுனில் நரங் தெரிவித்துள்ளார்.
தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயனின் மல்டிஃபிளக்ஸ் திரையரங்கிற்கு ஏ.எஸ்.கே.(ஏசியன் சிவகார்த்திகேயன் சினிமாஸ்) என்று பெயரிடப்பட்டது.
பிரபல ஏசியன் சினிமாஸ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களை வைத்து மல்டிபிளக்ஸ் திரையரங்குகளை கட்டி திறந்து வருகிறது. ஏற்கனவே அவர்கள் தெலுங்கு நடிகர்கள் மகேஷ் பாபு மற்றும் அல்லு அர்ஜுன் மற்றும் விஜய தேவரகொண்டாவுடன் பங்குதாரர்களாகி, ஹைதராபாத்தில் ஏஎம்பி சினிமாஸ், ஏஏஏ சினிமாஸ், மற்றும் ஏவிடி ஆகியவற்றைக் கட்டியுள்ளனர். நேற்று ஏஏஏ சினிமாஸ் திறப்பு விழாவில், ஏசியன் சினிமாஸின் சுனில் நரங், விரைவில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணியாற்றப் போவதாகக் கூறினார்.
NEWS EDITOR : RP