ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமனேர் அருகே நேற்று இரவு சாலையை கடக்க முயன்ற யானைகள் மீது வேகமாக சென்ற லாரி மோதியது. இதில் 3 யானைகள் உயிரிழந்தன.
சித்தூர்- பலமனேறு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜாகமரலா சந்திப்பு அருகே நேற்று
இரவு சாலையை கடக்க முயன்ற யானைகள் மீது அந்த வழியாக வேகமாக சென்று கொண்டிருந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில்இரண்டு குட்டி யானைகளும் ஒரு பெரிய யானையும் இறந்து விட்டன.
விபத்து பற்றிய தகவல் அறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் யானைகளின்
உடல்களை அப்புறப்படுத்தி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து காரணமாக சித்தூர்-பலமனேறு வழித்தடத்தில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மேலும் பலமனேறு போலீசாரும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கி உள்ளனர்.
NEWS EDITOR : RP