நான் எதிர்பார்த்து காத்திருந்த நபர் விஜய் வர்மா தான் என நடிகை தமன்னா தனது காதலை ஒப்புக்கொண்டார்.
தமிழில் விஜய், அஜித், சூர்யா, விஷால், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள தமன்னா தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி இவருக்கு திருப்புமுனை படமாக அமைந்தது. இவர் தற்போது இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பாலிவுட்டில் இவர் நடித்துள்ள ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ விரைவில் வெளியாகவுள்ளது.
நடிகை தமன்னா, பாலிவுட் பிரபலம் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக சமீப காலமாக சமூக வலைதளத்தில் வதந்திகள் பரவி வந்தது. இருவரும் கோவாவில் நடந்த இந்த ஆண்டு புத்தாண்டு விருந்தில் கலந்துகொண்ட வீடியோ இணைய தளத்தில் வைரலானது. மேலும் மும்பையில் அடிக்கடி ஜோடியாக சுற்றும் புகைப்படங்களும் வெளியானது. இந்த நிலையில் விஜய்வர்மாவை காதலிப்பது உண்மை என்று தமன்னா உறுதிப்படுத்தி உள்ளார்.
இதுகுறித்து தமன்னா கூறியிருப்பதாவது: ”ஒருவர் சக நடிகராக இருப்பதாலேயே அவருடன் காதல் வந்துவிடும் என நினைக்கவில்லை. ஒருவருடன் காதல் வரவேண்டும் என்றால், அவரிடம் ஏதாவது ஒன்றை உணர வேண்டும். அது என்ன என்பது தனிப்பட்ட விஷயம்.
எனக்கு அவர் மீது ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ படப்பிடிப்பில் காதல் ஏற்பட்டது. நான் எதிர்பார்த்து காத்திருந்த நபர் அவர்தான் என்பதை உணர்ந்தேன். சரியான நபரை தேர்ந்தெடுப்பது முக்கியம். அவருடனான புரிதல் அவசியம். அதை விஜய் வர்மாவிடம் கண்டேன்.அவர் என் மகிழ்ச்சியின் இடமாக மாறிவிட்டார்.” என கூறினார்.
இவர்கள் காதல் குறித்து விஜய் வர்மாவிடம் கேட்டபோது, இப்போது அவர் வாழ்க்கையில் அதிகமான காதல் இருப்பதாகவும், அதனால் அவர் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார். மேலும் அவர் தனது தனிப்பட்ட விஷயங்களைக் காட்டிலும் தனது வேலையைப் பேச விரும்புகிறேன் என்றும் கூறினார்.
NEWS EDITOR : RP