தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை திருவண்ணாமலை தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.
வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் 50 சதவீத அரசு இடஒதுக்கீட்டின் படி சேர்க்கை செய்ய இணையதளம் வாயிலாக சேர்க்கை நடைபெற உள்ளது. விண்ணப்பிக்க வருகிற 26-ந் தேதி கடைசி நாளாகும். அதன்படி திருவண்ணாமலை அரசு தொழிற் பயிற்சி நிலையம், திருவண்ணாமலை மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், செய்யாறு அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், ஜமுனாமரத்தூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள சேர்க்கை உதவி மையத்திற்கு வருகைபுரிந்து சேர்க்கை தொடர்பான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
இந்த மாணவர் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க 8 அல்லது 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், முன்னுரிமை சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், இணையதள முகவரி மற்றும் செல்போன் ஆகியவை இணைக்க வேண்டும். இணையவழியாக விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். உதவி மையத்திற்கு வருகைபுரியும் மாணவர்கள் பெற்றோர்கள், பாதுகாவலர்கள் உள்ளிட்ட அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார்.
NEWS EDITOR : RP