பாடகியும், ஏ.ஆர்.ரகுமானின் மூத்த மகளுமான கதீஜா இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளார்.
சில்லுக்கருப்பட்டி, ஏலே ஆகிய திரைப்படங்களை இயக்கிய ஹலிதா ஷமீம் தற்போது இயக்கி வரும் மின்மினி என்ற திரைப்படத்திற்கு கதீஜா இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் கதீஜா குறித்து தனது சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ள ஹலிதா ஷமீம், “மின்மினி படத்திற்காக கதீஜாவுடன் பணிபுரிவது மிக்க மகிழ்ச்சி, இவர் மிகவும் அசாதரணமான திறமைசாலி; பாடகர் மட்டுமல்லாது சிறந்த இசையமைப்பாளரும் கூட என புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் மின்மினி திரைப்படத்திற்கு சிறந்த இசை உருவாகிக்கொண்டிருக்கிறது எனக்குறியுள்ள ஹலிதா ஷமீம், இசைக்கோர்வையில் ஈடுபட்டுள்ள கதீஜாவுடனான போட்டோவை பகிர்ந்துள்ளார்.
2015-ஆம் ஆண்டு தொடங்கிய மின்மினி திரைப்படம் தற்போது வரை தயாரிப்பில் உள்ளது. ஏழு ஆண்டுகளை கடந்து இப்படம் இன்னும் முடிவடையாமல் இருப்பதற்கு ஒரு பிரத்யேக காரணம் உள்ளது. இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்கள், வளரும் வரை 7 வருடங்கள் காத்திருந்து தற்போது படப்பிடிப்பு நடந்துள்ளது. திரையுலகில் இதுவரை யாரும் செய்திராத புதுமுயற்சியாகும் இது.
NEWS EDITOR : RP