ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான மலையாள திரைப்படம் ‘2018’. இந்தப் படத்தில் டொவினோ தாமஸ், ஆசிஃப் அலி, குஞ்சாகா போபன், வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, லால், கலையரசன், நரேன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
கடந்த 2018-ல் கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வரும் ‘2018’ மலையாள சினிமாவில் அதிவேகமாக ரூ.100 கோடி வசூலை குவித்த படம் என்ற பெருமையை பெற்றது.
அதே போல, ரூ.200 கோடியை வசூலித்த முதல் மலையாள படம் என்ற சாதனையை படைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், கேரளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான புலி முருகன் திரைப்படம் ரூ.84 கோடி வசூலித்திருந்ததே சாதனையாகக் கருத்தப்பட்டு வந்தநிலையில், 7 ஆண்டுகளுக்குப் பின் 2018 திரைப்படம் அச்சாதனையை முறியடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
NEWS EDITOR : RP