நொய்டா, உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் மாநில அரசு சார்பில் திரைப்பட நகர் உருவாக்கப்பட்டு உள்ளது. இங்குள்ள பிலிம் சிட்டியில் அமைந்துள்ள ஸ்டூடியோவில் நேற்று முன்தினம் இரவு ‘பேஷன் ஷோ’ நிகழ்ச்சி ஏற்பாடு செய்யபட்டு இருந்தது. இதில் ஏராளமான மாடல் அழகிகள் விதவிதமான ஆடை அணிந்து ‘ரேம்ப் வாக்’ வந்தனர்.
24 வயதான வன்சிகா சோப்ரா என்ற மாடல் அழகி ‘ரேம்ப் வாக்’ சென்ற போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த இரும்பு தூண் சரிந்து அவர் மீது விழுந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.ஆக்ராவின் குவாலியர் சாலையைச் சேர்ந்த பாபி ராஜ் என்ற இளைஞர் காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
NEWS EDITOR : RP
Please follow and like us: