சென்னை, 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டி, கல்வி உதவித்தொகைய நடிகர் விஜய் வழங்க உள்ளதாக அறிவிக்கப்படது. மொத்தமுள்ள 234 சட்டசபை தொகுதிகளில் உள்ள 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற தலா மூன்று மாணவர்கள் வீதம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ – மாணவியருக்கு பரிசு, கல்வி உதவித் தொகை வழங்க, விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை ஜூன் 17-ந் தேதி நடிகர் விஜய் சந்திக்கிறார் என்று விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார். 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பெற்ற மாணவ மாணவிகளை நடிகர் விஜய் நேரில் சந்திக்க உள்ளார்.
இந்த நிலையில் தொகுதி வாரியாக முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு வரும் 17ஆம் தேதி விஜய் கல்வி விருது வழங்க உள்ளார் ..மாணவர்களுக்கு நடிகர் விஜய் ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழை வழங்க உள்ளார் .நடிகர் விஜய் கல்வி விருது வழங்கும் விழாவில் 6 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். விழாவில் பங்குபெறும் 6000 பேருக்கு மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் பணிதொடங்கப்பட்டுள்ளது . மாவட்ட தலைவர்கள் மூலம் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
NEWS EDITOR : RP