விஜய்சேதுபதி தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் தயாராகும் மேரி கிறிஸ்மஸ் படத்தில் கத்ரினா கைப்புடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்தை ஶ்ரீராம் ராகவன் டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தில் விஜய்சேதுபதி மும்பை செல்லும் தமிழ் இளைஞன் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், தமிழிலேயே அவர் வசனம் பேசி நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மேரி கிறிஸ்மஸ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ராதிகா ஆப்தேவும் தற்போது தேர்வாகி உள்ளார். விஜய்சேதுபதி, ராதிகா ஆப்தே இணைந்து நடிக்கும் காட்சிகள் விரைவில் படமாக்கப்பட உள்ளது. ராதிகா ஆப்தே ஏற்கனவே தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கபாலி, கார்த்தி ஜோடியாக ஆல் இன் ஆல் அழகுராஜா ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். இந்தியில் பிரபல நடிகையாக இருக்கிறார்.
ஶ்ரீராம் ராகவன் இயக்கிய பதிலாபூர், அந்தா தூண் ஆகிய படங்களில் ராதிகா ஆப்தே ஏற்கனவே நடித்து இருந்தார். அந்த படங்களுக்கு வரவேற்பு கிடைத்தது. எனவே ராதிகா ஆப்தே ராசியான நடிகை என்று கருதி மேரி கிறிஸ்மஸ் படத்திலும் இயக்குனர் ஶ்ரீராம் ராகவன் ஒப்பந்தம் செய்து இருப்பதாக இந்தி திரையுலகினர் பேசுகிறார்கள்.
NEWS EDITOR : RP