சென்னை பாட்னாவில் இருந்து பெங்களூரு நோக்கி செல்லும் அம்சபர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மதியம் பட்டாபிராம்-நெமிலிச்சேரி ரெயில் நிலையங்களுக்கு இடையே வந்தபோது திடீரென என்ஜினில் ஏற்பட்ட பழுதால் நடுவழியில் நிறுத்தப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என்ஜினில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடியும் முடியாததால் மாற்று என்ஜின் வரவழைக்கப்பட்டது. பின்னர் அந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மாற்று என்ஜின் பொருத்தப்பட்டு பெங்களூரு புறப்பட்டு சென்றது. இதனால் அதில் பயணம் செய்த பயணிகள் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக ரெயில் பெட்டியிலேயே அமர்ந்து இருந்ததால் கடும் அவதிக்குள்ளானார்கள்.
மேலும் அந்த வழியில் குறிப்பிட்ட நேரத்தில் செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள், சென்னையில் இருந்து அரக்கோணம் செல்லக்கூடிய புறநகர் மின்சார ரெயில்களும் தாமதமானது. சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் புறநகர் மின்சார ரெயில்கள் செல்லக்கூடிய தண்டவாளத்தில் இயக்கப்பட்டது.
NEWS EDITOR : RP