ராஞ்சி, ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தின் பவ்ரா கோலியரி பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாரத் கோக்கிங் நிலக்கரி சுரங்கம் இன்று காலை திடீரென சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் 3 பேர் பலியானதாகவும், மேலும் பலர் சிக்கியுள்ளதாகவும் முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு மீட்புக்குழு விரைந்துள்ளது. அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என போலீசார் தெரிவித்தனர்.
NEWS EDITOR : RP
Please follow and like us: