தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற ஆக்ஷன் திரில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. லோகேஷ் – விஜய் கூட்டணியில் உருவாகி வரும் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அவ்வப்போது வரும் சில அப்டேட்டுகளால் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் த்ரிஷா, பிரியா ஆனந்த், கவுதம் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜுன், கதிர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மேலும் மிஷ்கின், சஞ்சய் தத் இருவரும் வில்லன்களாக நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக 14 வருடங்களுக்கு பிறகு த்ரிஷா நடிக்கிறார்.
விஜய் தொடர்ந்து தன்னுடைய படங்களில் பாடி வருகிறார். துப்பாக்கி படத்தில் கூகுல் கூகுள் என்ற பாடலை தான் அவர் நீண்ட நாட்களுக்கு பிறகு பாடினார். பின்னர் கத்தி திரைப்படத்தில் அனிருத் இசையில் செல்பி புள்ள என்ற பாடலை பாடினார். இதே போன்று மாஸ்டர் திரைப்படத்தில் குட்டி ஸ்டோரி என்ற பாடல், தொடர்ந்து பீஸ்டு படத்தில் ஜாலியா ஜிம் கானா என்ற பாடலை பாடினார்.
இதனை தொடர்ந்து தற்போது லியோ படத்தின் அறிமுகப்பாடலை விஜய் பாடியுள்ளதாகவும், அனிருத் இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கிட்டத்தட்ட 2000 நடன கலைஞர்களை வைத்து மிகப்பிரமாண்டமாக இந்த பாடல் காட்சியை லோகேஷ் படமாக்கி வருகிறார் எனவும் கூறப்படுகிறது.
NEWS EDITOR : RP