திருவள்ளூர் மீஞ்சூர் அருகே புதுப்பேடு கிராமத்தில் கற்பக விநாயகர் கோவில் தெருவில் உள்ள குப்புசாமி நகரில் 2-வது தெருவில் வசிப்பவர் சங்கர் (வயது 38). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். சங்கர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். இவர் நேற்று உடல் நிலை சரியில்லை என மனைவியிடம் கூறிவிட்டு வீட்டில் இருந்தார்.
இந்தநிலையில் மனைவி கடைக்கு சென்றபோது சங்கர் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கிய விழுந்தார். மனைவி சுசீத்திரா வீட்டுக்கு வந்து பார்த்தபோது கணவர் மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவரை மீட்டு மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர் அங்கு அவருக்கு முதலுதவி சிசிச்சை அளிக்கப்பட்டு பின் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சங்கர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
NEWS EDITOR : RP