தெலுங்கு நடிகரான நடிகர் பிரபாஸ் ‘பாகுபலி’ வெற்றிக்குப் பிறகு பான் இந்தியா திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் பிரபாஸின் ஆதிபுருஷ் திரைபபடம், இந்த ஆண்டின் மிகப்பெரிய பான்-இந்திய படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகும் ஆதிபுருஷ் இந்திய இதிகாசமான ராமாயணத்தின் தழுவலாகும். இத்திரைப்படத்தில் க்ரீத்தி சனோன் சீதா தேவியாகவும், சைஃப் அலி கான் ராவணனாகவும் நடித்துள்ளனர். ஆதிபுருஷ், தமிழ், கன்னடம், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே விறுவிறுப்பை ஏற்படுத்திய நிலையில், நேற்று இந்தப் படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்று திருப்பதியில் நடைபெற்றது. இதற்காக திருப்பதி சென்ற நடிகர் பிரபாஸ் நேற்றுகாலை எ ங்கு சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் மாலையில் நடைபெற்ற படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வில் உடன் நடித்த நடிகர்களுடன் இணைந்து கலந்து கொண்டார். அப்போது ரசிகர்கள் சிலர் நடிகர் பிரபாஸிடம் எப்போது திருமணம் செய்து கொள்ளப்போகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர், எனக்கு திருமணம் என்றாவது ஒருநாள் நடக்கும். அது கண்டிப்பாக திருப்பதியில்தான் நடக்கும் என்று கூறினார். ஏற்கனவே பாகுபலியில் நடிகை அனுஷ்காவுடன் நடித்த போது இருவரும் காதலிக்கிறார்கள் என்ற வதந்திகள் பரவியது போலவே, தற்போது ஆதிபுருஷ், தனக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை கீர்த்தி சனோனை, பிரபாஸ் காதலிப்பதாக செய்திகள் பரவின. இதனை நடிகை கீர்த்தி சனோனும் மறுத்திருந்தார்.
இந்த நிலையில், நடிகர் பிரபாஸ் யாரை திருமணம் செய்துகொள்ளக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்தாலும், திருமணம் பற்றி மனம் திறந்து பிரபாஸ் கூறிய வார்த்தைகள் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபாஸ் ராமராக நடித்துள்ள ஆதிபுருஷ் படம் வருகிற 16ம் தேதி வெளியாவது குறிப்பிடத்தக்கது.
NEWS EDITOR : RP