ஒருவர் படித்து முடித்தவுடன் போதுமான வருமானத்துடன் நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்ற பதற்றத்தை கடந்து வராதோர் யாருமே இல்லை என்றே சொல்லலாம்.
நேர்காணல்கள் மற்றும் சோதனைகளுக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். இதையடுத்து வேலைக்கு விண்ணப்பிக்கும் போது ஒவ்வொரு மாணவரும் அதிக ஊதியம் மற்றும் நல்ல நிறுவன பலன்களை பெற விரும்புவார்கள். அப்படி ஒரு நிறுவனத்தில் சேர்ந்து குறிப்பிட்ட வருமானத்தை ஈட்ட ஆரம்பித்தாளும் அது தமக்கு போதுமானதா என்ற கேள்வி ஒவ்வொருவர் மனதிலும் எழுவது இயல்பாகிவிட்டது. அதிலும் நுகர்வு கலாச்சாரம் பெருகிவிட்ட தற்போதைய காலக்கட்டத்தில் எவ்வளவு சம்பாதித்தாலும் அது போதுமானதாக இல்லை என்ற உணர்வோட வாழும் நிலைக்கு அனைவரும் தள்ளப்பட்டுள்ளனர். இப்படிப்பட்ட உணர்வோடு திபாலி ஷர்மா என்பவர் ட்விட்டரில் எழுப்பிய கேள்வி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
திபாலி ஷர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் 23 வயதுடைய ஒருவருக்கு இந்தியாவில் ஆண்டு வருமானம் ரூ.40 லட்சம் போதுமானதா என கேள்வி எழுப்பியிருக்கிறார். இது ட்விட்டரில் 1.4 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரல் ஆகியுள்ளது. மேலும் அதிர்ச்சிக்குள்ளான ட்விட்டர் பயனாளர்கள் பலர் திபாலி ஷர்மாவின் கேள்வியை விமர்சித்தும், சிலர் ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
NEWS EDITOR : RP