நீலகிரி ஊட்டி ஒடிசா ரயில் விபத்தில் 280-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டனர். மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்தனர். நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய இந்த விபத்துக்கான காரணங்கள் குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. மேலும் உலகத் தலைவர்கள் முதல் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஊட்டி காந்தல் மைதானத்தில் நடைபெற்றது. இது நீலகிரி கால்பந்து சங்கம் சார்பில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இதேபோல் நீலகிரி பாஜக சார்பிலும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் தனியார் அமைப்புகள் சார்பிலும் உயிரிழந்தவர்களின் நினைவாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
NEWS EDITOR : RP