அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றி உள்ள மாடவீதியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி தொடங்கியது. திருவண்ணாமலை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மாட வீதியில் திருப்பதிக்கு இணையான சிமெண்டு சாலை அமைக்கப்படும் என்று சட்டமன்ற தேர்தலின் போது தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.
அதன்படி மாட வீதியில் முதற்கட்டமாக பே கோபுரம் பகுதி மற்றும் பெரிய தெருவில் நெடுஞ்சாலைத்துறை மூலமாக சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் 2021-22-யின் கீழ் ரூ.15 கோடி மதிப்பில் சிமெண்டு சாலை அமைக்கப்பட உள்ளது.
இதற்காக அந்த பகுதியில் பக்க கால்வாய்கள், குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இந்த நிலையில் திருவூடல் தெரு- பேகோபுரத் தெரு சந்திப்பு (திரவுபதி அம்மன் கோவில்) முதல் வட ஒத்தவாடைத் தெரு வரையில் முதற்கட்டமாக இன்று சிமெண்டு சாலை அமைக்கும் பணி தொடங்கியது.
சிமெண்டு சாலை அமைக்கும் பணியையொட்டி பே கோபுரத் தெரு, பெரிய தெரு மூடப்பட்டு இந்த பணி முடியும் வரை அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
NEWS EDITOR : RP