திருவள்ளூர் அருகே திருநின்றவூரில் தண்டவாளத்தில் மரத்துண்டு கிடந்தது தொடர்பாக ரெயில்வே போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை, சென்னை திருநின்றவூர் அருகே நள்ளிரவில் அவ்வழியே வந்த சரக்கு ரெயில் என்ஜினில் மரத்துண்டு சிக்கிய நிலையில், ஓட்டுநர் அதனை அப்புறப்படுத்தி ஆவடி ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
நள்ளிரவில் சென்ற சரக்கு ரெயில் மரத்துண்டில் சிக்கி நின்ற நிலையில் ஓட்டுநர் ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். ரெயில் தண்டவாளம் அருகே மரத்துணை போட்டது யார் என்பது தொடர்பாக டிஎஸ்பி முத்துக்குமார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநின்றவூர் நேரு நகர் செந்தில் என்பவரது வீட்டில் தென்னை மரத்தை வெட்டி தண்டவாளம் அருகில் போட்டுள்ளார்; அந்த மரத்துண்டை எடுத்து மர்ம நபர்கள் தண்டவாளத்தில் வைத்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ரெயிலை கவிழ்க்க சதியா என்ற கோணத்தில் சந்தேகத்தின் பேரில் சிலரிடம் ரெயில்வெ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
NEWS EDITOR : RP