‘தல’ தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி ஆகிய இருவரும் இணைந்து தொடங்கிய தோனி எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் முதல் திரைப்படம் ‘எல்.ஜி.எம்’(லெட்ஸ் கெட் மேரீட்). அறிமுக இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகும் இந்த திரைப்படத்தில் நடிகை நதியா, நடிகர் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் நாயகி இவானா, நகைச்சுவை நடிகர் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
விஸ்வஜித் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ரமேஷ் தமிழ்மணி இசையமைக்கிறார். சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கத்தை மையமாக கொண்டு, குடும்ப பொழுதுபோக்கு அம்சத்துடன் தயாராகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 28-ம் தேதி சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் ‘எல்.ஜி.எம்’ படத்தின் இரண்டாம் லுக் போஸ்டரை படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. இந்நிலையில் ’எல்.ஜி.எம்’ படத்தின் டீசரை இன்று மாலை 7 மணிக்கு, தோனியின் ஃபேஸ்புக் பக்கத்திலும், சாக்ஷி தோனி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிடுவதாக படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. மேலும் ’ஸ்னீக் பீக்கிற்காக காத்திருங்கள்’ என்ற அறிவிப்பையும் படக்குழு வழங்கியுள்ளது.
NEWS EDITOR : RP