அமராவதி, ஆந்திராவின் மண்டல் மாவட்டத்தில் உள்ள கசிம்கோடா பகுதியில் பீர் பாட்டில்களை ஏற்றி சென்ற லாரி இன்று காலை விபத்துக்குள்ளானது. பய்யாவரம் தேசிய நெடுஞ்சாலையில் லாரி சென்று கொண்டிருந்த போது ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. கவிழ்ந்ததில் லாரியில் கொண்டு செல்லப்பட்ட பீர் பாட்டில்கள் அடங்கிய பெட்டிகள் சாலையில் விழுந்தன. சில பாட்டில்கள் சாலையில் உருண்டோடின. இதைப்பார்த்த உள்ளூர் மதுப்பிரியர்கள் முகம் மலர ஓடிவந்து அள்ளி சென்றனர்.
தங்களால் எவ்வளவு கொண்டு செல்ல முடியுமோ அந்த அளவுக்கு பாட்டில்களை கையிலும் இடுப்பிலும் சொருகிக் கொண்டு சந்தோஷமாக சென்றனர். சில பெட்டிகளுக்குள் பீர் பாட்டில்கள் உடைந்து ஆறு போல சாலையில் ஓடியது. இப்படி உடைந்த பெட்டிகளுக்குள் ஏதேனும் பீர்கள் உடையாமல் இருக்கிறதா என மத்ரு பிரியர்கள் தேடி தேடி எடுக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
NEWS EDITOR : RP