புதுடெல்லி, ஜெர்மனியின் பாதுகாப்பு மந்திரி போரிஸ் பிஸ்தோரியஸ் இந்தியாவில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் இன்று காலை புதுடெல்லிக்கு வருகை தந்து உள்ளார்.
இந்தோனேசியாவில் இருந்து இந்தியா வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்பின், டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவகத்திற்கு சென்ற அவர், வீரமரணம் அடைந்த இந்திய ஆயுத படை வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இதுபற்றி இந்தியாவில் உள்ள ஜெர்மனி தூதரகம் வெளியிட்டு உள்ள செய்தியில், ஜெர்மனி நாட்டின் பாதுகாப்பு துறைக்கான மந்திரி போரிஸ் பிஸ்தோரியஸ் மற்றும் அவரது குழுவினருக்கு இந்தியாவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நீங்கள் வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி. டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வது உற்சாகம் ஏற்படுத்துகிறது என தெரிவித்து உள்ளது.
அவரது இந்த பயணத்தில், டெல்லியில் மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து இதுதரப்பு உறவுகள் பற்றி பேச இருக்கிறார் என மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பு தெரிவிக்கின்றது. இதன்படி, ஜெர்மனி மந்திரி போரிசை, மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் நேரில் சந்தித்து உள்ளார். இதனை தொடர்ந்து, போரிசுக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. புதுடெல்லியில் நடைபெற உள்ள பாதுகாப்பு திறனுக்கான புதுவித கண்டுபிடிப்புகள் பற்றிய நிகழ்ச்சி ஒன்றில் சில பாதுகாப்பு ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை சந்தித்து அவர் பேச கூடும் என்று தகவல் தெரிவிக்கின்றது.
NEWS EDITOR : RP