Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக, பலரும் கவனிக்கும் ஒரு முக்கிய நடிகராக இருக்கிறார் அஜித். கடைசியாக இவரது நடிப்பில் துணிவு திரைப்படம் வெளியாகி இருந்தது. இப்படத்தை அடுத்து அஜித் லைகா நிறுவன தயாரிப்பில் படம் நடிக்கிறார் என்பது உடனே முடிவானது. ஆனால் இயக்குநர் மட்டும் யாரென்று தெரியாமல் இருந்தது.

இந்த நிலையில் தான் அஜித்தின் பிறந்தநாளான மே 1-ம் தேதி லைகா நிறுவனம், இயக்குநர் மகிழ் திருமேனி, அஜித்தின் புதிய படத்தை இயக்கவுள்ளார் என அறிவித்தது. இவர் தமிழில் தடையறத் தாக்க, மீகாமன் மற்றும் தடம் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் கடந்த வருடம் கலகத்தலைவன் என்ற ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தை நடிகர் உதயநிதி நடிப்பில் இயக்கி வெற்றி கண்டார். இந்த சூழலில் நடிகர் அஜித்தும், இயக்குனர் மகிழ் திருமேனியும் தற்போது கைகோர்த்துள்ளனர்.

அனிருத் இசையமைக்கும் இந்த “விடாமுயற்சி” படம் அஜித் குமார் நடிக்கும் 62-வது படமாகும். அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த நீரவ் ஷா தான் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பானது இந்த வாரம் புணேவில் தொடங்கவுள்ளதாகவும், அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு 5-வது முறையாக அஜித்துடன் இணையவுள்ளார் நடிகை த்ரிஷா. மேலும், படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்த தகவல்களை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

NEWS EDITOR : RP

Please follow and like us:

Spread the love

By Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram