சென்னை, தமிழகத்தில் ஏப்ர.15 முதல் ஜுன் 14 வரை 2 மாத காலம் மீன்பிடி தடைக்காலம் ஆகும். தடைக்காலம் முடிந்து ஜுன் 15 முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று அதிகாலை நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த கலையரசன் என்பவரது விசைப்படகு பழுதாகி நின்றது.
அப்போது ரோந்தில் இருந்த இலங்கை கடற்படையினர் படகிலிருந்து அந்தோணி ஜான்சன், சேசுராஜ், மரிய ரூபன், முத்து, அந்தோணி பிரபு, லெனின், ஜேக்கப், ஜேம்ஸ் பிரதீப், அந்தாணி ஆகிய 9 மீனவர்களை கைது செய்தனர்.
இந்தநிலையில், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின், 9 பேரையும் விடுதலை செய்தது இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம். இலங்கை கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்ட 9 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
NEWS EDITOR : RP