கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் படையினர் திடீர் தாக்குதல் நடத்தியதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 250 க்கும் மேற்பட்டவர்களை பணய கைதிகளாக பிடித்து சென்றனர். இதில் ஏராளமான ராணுவ வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்தனர்.ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரையும் பணய கைதிகளை மீட்கும் வரை காஸா மீதான தாக்குதலை நிறுத்த போவது இல்லை என இஸ்ரேல் அறிவித்துள்ளது. காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் 38,000 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் காஸாவின் தென் பகுதியில் கான்யூனிஸில் நேற்று இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. காஸா மீது இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் 71 பாலஸ்தீனர்கள் பலியானதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 289 பேர் படுகாயமடைந்தனர்.
Please follow and like us: