புழல் சிறையில் 5 கைதிகளிடம் இருந்து 7 செல்போன்கள்..!!

Spread the love

சென்னை புழல் சிறையில் மத்திய விசாரணை சிறை, தண்டனை சிறை, மகளிர் சிறை என 3 சிறைகள் உள்ளன. இங்கு 150க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். தண்டனை மற்றும் விசாரணை சிறைகளில் கைதிகளிடம் கஞ்சா மற்றும் செல்போன் பறிமுதல் செய்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் விசாரணை மற்றும் தண்டனை சிறையில் கைதிகள் செல்போன் பயன்படுத்தி வருவதாக சிறைத்துறை உயரதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கைதிகளிடம் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது விசாரணை சிறையில் இலங்கையை சேர்ந்த அலெக்சாண்டர் (40) என்பவர் தங்கியுள்ள அறை கழிவறையில் 2 செல்போன், சிம்கார்டு, பேட்டரி சார்ஜர் பறிமுதல் செய்யப்பட்டது.

தண்டனை சிறையில் எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த ரகுமான் (32), நார்வேநாட்டை சேர்ந்த இஸ்ரோ அகஸ்தியன் (46), அலோசிய டேவிட் (50), கொலம்பியா நாட்டை சேர்ந்த எட்வின் ஹென்றி (48) ஆகிய கைதிகள் கழிவறை பின்புறம் செல்போனில் பேசியதை பார்த்து மடக்கிபிடித்தனர். இவர்களிடம் இருந்து 5 செல்போன், 5 பேட்டரிகள், சார்ஜர்கள், சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

NEWS EDITOR : RP

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram