கடந்த ஒன்றாம் தேதி ஸ்பைடர் மேன் அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ் திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த படத்தில் முதல் இந்திய ஸ்பைடர் மேன் பவித்ர் பிரபாகர் அறிமுகமானார். அவருக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ஷுப்மான் கில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பின்னணி குரல் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் மலேசியாவில் படத்தின் வெளியீட்டை கொண்டாடும் வகையில் சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சிறப்பு நிகழ்வை ஒன்றுக்கு ஏற்பாடு செய்தது. அதாவது கின்னஸ் சாதனையை முறியடிக்கும் விதமாக ஸ்பைடர் வேடமிட்ட 685 பேர் ஓரிடத்தில் கூடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனையடுத்து மலேசியாவின் சிலாங்கூரில் உள்ள மால் ஒன்றில் ஸ்பைடர் வேடமிட்ட 685 பேர் ஒன்று கூடினர். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஸ்பைடர் உடையில் வந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அவர்களை அங்கு திரண்டு இருந்த ஏராளமானோர் கைதட்டி உற்சாகப்படுத்தினர். இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
NEWS EDITOR : RP