60 வயது பெண் “மிஸ் யுனிவர்ஸ் பியூனஸ் அயர்ஸ்” பட்டம் பெற்று சாதனை..!!

Spread the love

 வயதைக் கடந்த பிறகு அழகுப் போட்டியில் பங்கேற்பது என்பது அதிகம் பேசப்படாத  ஒன்று.  இந்நிலையில்,  60 வயது பெண் ஒருவர் அழகி போட்டியில் கலந்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இத்தகைய ஆச்சரியமான சம்பவம் அர்ஜென்டினாவில் நடந்துள்ளது.  வழக்கறிஞராகவும், பத்திரிக்கையாளராகவும் பணிபுரியும் 60 வயதான Alejandra Marisa Rodriguez அழகிப் போட்டியில் கலந்து கொண்டார்.  அர்ஜென்டினாவின் லா பிளாட்டாவைச் சேர்ந்த இவர், அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் நடைபெற்ற Miss Universe Buenos Aires 2024 போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.  அவரது இந்த வெற்றி உலகெங்கிலும் உள்ள பலரை ஊக்கப்படுத்தி உள்ளது.  ரோட்ரிகஸின் வெற்றி வரலாற்றில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.  60 வயதில் அழகுப் போட்டியில் வென்ற முதல் பெண்மணி இவர்.மிஸ் அர்ஜென்டினா போட்டி செப்டம்பர் 28 ஆம் திகதி மெக்சிகோவில் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்றாலும் சர்வதேச அழகி போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெறுவார். முன்னதாக,  உலக அழகி போட்டியில் 18 வயது முதல் 28 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram