வண்டலூர் அறிஞர் அண்ணா வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 180 வகையான 2500க்கும் மேற்பட்ட வன விலங்குகள் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுமக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடங்களில் ஒன்றாக இருப்பது வண்டலூர் உயிரியல் பூங்கா தான்.
நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்ளூர், வெளியூர் , வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உயிரியல் பூங்காவில் பாதுகாக்கப்பட்டு வரும் விலங்குகளை கண்டு ரசிக்கின்றனர். விடுமுறை நாட்கள் மற்றும் கோடை விடுமுறை போன்ற தினங்களில் வழக்கத்தை விட மூன்றிலிருந்து , நான்கு மடங்கு அதிக அளவு மக்கள் உயிரியல் பூங்காவிற்கு வருகை புரிவது வழக்கம்.
இந்த ஆண்டும் அதே போல, சுற்றுலாப் பயணிகள் உயிரியல் பூங்காவிற்க்கு படையெடுக்க தொடங்கினர். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வண்டலூர் உயிரியல் பூங்கா சமந்தமான ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அப்பதிவில் அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்காவின் (AAZP) மிருகக்காட்சிசாலையில் “கலர்ஸ் ஆஃப் ஏஏஇசட்பி” – 4K சினிமாத் தரத்தில் உள்ள விலங்குகளை காண்க. என ஒரு யூடியூப் லின்க்கையும் கொடுத்துள்ளார்.