விளையாடும் போது முற்றத்தில் வந்த பாம்பை பிடித்து மென்று சாப்பிட்ட மூன்று வயது சிறுவன் இதனால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். லக்னோ உத்தரபிரதேசம் பரூக்பாத் மாவட்டத்தில் உள்ள மத்னாபூர் கிராமத்தை சேர்ந்த தினேஷ்குமாரின் மகன் ஆயுஷ் ( வயது 3) வீட்டின் முன் விளையாடி கொண்டு இருந்தான். பாட்டியின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் ஓடி வந்தனர். சிறுவன் வாயில் எதையோ போட்டு மென்று கொண்டு இருந்தான் அதைகண்டு முதலில் அதிர்ச்சியடைந்த பாட்டி, அதனை வாயில் இருந்து வெளியே இழுத்தபோது தான் அது பாம்பு என்று தெரிந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இறந்த பாம்பை பையில் போட்டு குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 24 மணிநேர கண்காணிப்புக்குப் பிறகு குழந்தை அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். குழந்தை நலமாக இருப்பதாகவும், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
NEWS EDITOR : RP