பாட்டி இறந்து 3 நாட்களே ஆன நிலையில் ஒடிசாவில் நடைபெறும் மாநிலங்களுக்கு இடையேயான தடகள போட்டியின் குண்டு எறிதல் பிரிவல் தஜிந்தர்பால் டூர் தமது ஆசிய சாதனையை முறியடித்துள்ளார்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் மாநிலங்களுக்கு இடையேயான (National Inter-State Championships) தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் குண்டு எறிதல் போட்டியில் பஞ்சாப் வீரர் தஜேந்திரசிங் டூர் பங்கேற்றார். அவர் 7.26 கிலோ பிரிவில் 3வது வாய்ப்பில் 21.77 மீட்டர் குண்டு எறிந்து தமது சாதனையை முறியடித்தார்.
அவர் இரு ஆண்டுகளுக்கு முன் 21.49 மீட்டர் வீசி ஆசிய சாதனை படைத்திருந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு தஜேந்திரசிங் டூர் பாட்டி காலமான நிலையில் அவர் இந்த அரிய சாதனையை படைத்துள்ளார்.
“நான் சாதனையை முறியடித்ததை உணர்ந்தபோது, கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டேன். என் கண்கள் ஈரமாகி, ஒரு கணம் என் பாட்டியை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். இந்த பதக்கத்தை அவருக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன்,” என தஜேந்திரசிங் டூர் தெரிவித்தார்.
22 மீட்டர் தூரம் குண்டு எறிவதே தனது அடுத்த இலக்கு என அவர் கூறியுள்ளார். தஜிந்தர்பால் ஏற்கனவே ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார், 2018ஆம் ஆண்டு 20.75 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
NEWS EDITOR : RP