Today

‘மெட்ராஸ்காரன்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அறிமுக இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் மலையாள நடிகர் ஷேன் நிகாம், கலையரசன் இணைந்து நடித்த திரைப்படம் “மெட்ராஸ்காரன்”. இதில் ஷேன் நிகாம் உடன் ஐஷ்வர்யா துட்டா , கீதா கைலாசம், கருணாஸ், நிஹாரிகா கொநிடேலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் சி எஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்க்கு பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை எஸ் புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. பொங்கலையொட்டி கடந்த ஜன.10ஆம் தேதி வெளியான இத்திரைப்படம், ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின்…

மேலும் படிக்க

அம்மா உணவகங்களிலேயே உணவு தயாரிக்கப்பட வேண்டும் –

அம்மா உணவகங்களை தனியாருக்கு வழங்கும் முயற்சியை சென்னை மாநாகராட்சி கைவிட வேண்டும் எனவும், அம்மா உணவகங்களிலேயே காலை உணவுத் திட்டத்திற்கான உணவு தயாரிக்கப்பட வேண்டும் என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது; “சென்னையில் உள்ள சுமார் 350க்கும் அதிகமான பள்ளிகளில், சுமார் 65,000க்கும் அதிகமான மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்திற்கு, அம்மா உணவகங்களில் உணவு தயார் செய்யப்படுகிறது. இதன் மூலம், அம்மா உணவகங்களில் பணிபுரிவோருக்கு, நிலையான…

மேலும் படிக்க

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

டெல்வி சட்டப்பேரவை தேர்தல் பிப்.5ம் தெதி நடைபெறவுள்ளதாக அறவிக்கப்பட்டுள்ளது.  மொத்தம் 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக் காலம் பிப்ரவரி 23ம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இந்த நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் தேதியை அறிவித்தார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது, “டெல்லியில் மொத்தம் 1.55 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஆண்கள் 83.49 லட்சம், பெண்கள் 71.74 லட்சம் மற்றும் 20 முதல் 29 வயதுடையவர்கள் 25.89 லட்சம் பேர்…

மேலும் படிக்க

நடிகர் ரஜினிகாந்த் இன்று தாய்லாந்த்து புற்றப்பட்டுச் சென்றார்.

கூலி படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று தாய்லாந்த்து புற்றப்பட்டுச் சென்றார்.  ‘வேட்டையன்’ படத்தினை தொடர்ந்து ‘கூலி’ படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். நடிகர் ரஜினிகாந்தின் 171-வது படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தில் ஸ்ருதிஹாசன், கிஷோர், சத்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசைமைக்கிறார். இப்படத்தின் ஷுட்டிங் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் சென்னையில்…

மேலும் படிக்க

ஆளுநர் யாராக இருந்தாலும், நடவடிக்கைகளைப் பின்பற்றியே ஆக வேண்டும் – தவெக தலைவர் விஜய்!

“மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர் யாராக இருந்தாலும், தமிழகச் சட்டமன்ற மரபைக் காக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றியே ஆக வேண்டும்” என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.  நடப்பாண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. சட்டசபைக்குள் நுழைந்த ஆளுநர் உரையை வாசிக்காமல் எழுந்து சென்றார். ஆளுநரின் இந்த செயலுக்கு தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது தவெக தலைவர் விஜய் ஆளுநரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ்…

மேலும் படிக்க

2 குழந்தைகளுக்கு HMPV தொற்று !

கர்நாடகாவில் 2 குழந்தைகளுக்கு HMPV தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்தியா உள்பட உலக அளவில் எச்.எம்.பி.வி. தொற்று ஏற்கனவே பரவி காணப்படுகிறது. இந்த தொற்றுடன் தொடர்புடைய சுவாச பாதிப்புகள் பல்வேறு நாடுகளிலும் கண்டறியப்பட்டு உள்ளன. இந்த நிலையில் நாடு முழுவதும் சுவாச பாதிப்புகளை கண்காணிக்கும் முயற்சியில் ஐ.சி.எம்.ஆர். ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், கர்நாடகாவின் பெங்களூரு நகரில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி. தொற்று கண்டறியப்பட்டு உள்ளது என மத்திய சுகாதார துறை உறுதி செய்துள்ளது. அதன்படி, 3…

மேலும் படிக்க

அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்

 விதிமீறல் கட்டிடங்களால் சென்னை மாநகரம் கான்கிரீட் காடாக மாறிவிட்டதால், மழை காலத்தில் வெள்ள பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது. கடமையை செய்ய தவறும் அதிகாரிகள் மீது அரசும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சென்னையை சேர்ந்த சாந்தி என்பவருக்கு சொந்தமான கட்டி டத்தில் விதிமீறல் இருப்பதால், அதை சீல் வைத்து இடிப்பது தொடர்பாக மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு மனு தாரர் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தை அதிகாரிகள் ஏற்கவில்லை. இதனால், அரசுக்கு…

மேலும் படிக்க

முதல்வர் ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து

 “புத்தாண்டாகிய 2025-ல் உலகெங்கும் அமைதி திரும்பட்டும். நம் நாட்டில் சமூக நல்லிணக்கம் தழைத்துச் செழித்தோங்கட்டும். இல்லந்தோறும் அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கட்டும்! தமிழ்நாடு அதற்கு வழிகாட்டும்! அனைவருக்கும் எனது உளம் நிறைந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “இந்திய ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மீட்ட 2024 நிறைவுற்று, புத்தாண்டு 2025 பிறக்கிறது. தமிழ்ப் புதல்வன், ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர், நீங்கள்…

மேலும் படிக்க

ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் 2025 ஆங்கில புத்தாண்டு இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ஆங்கில புத்தாண்டை மக்கள் உற்சாகமாக வரவேற்று கொண்டாடி வருகின்றனர். தமிழகம் முழுவதும் கோவில்களிலும், தேவாலயங்களிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புத்தாண்டையொட்டி அரசியல் தலைவர்கள்,நடிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆங்கில புத்தாண்டையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அனைவருக்கும்…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram