தாய்வானில் சூறாவளி காரணமாக 2 சரக்கு கப்பல்கள் கடலில் மூழ்கி 10 பேர் காணாமல் போயுள்ளனர்..!!
தைவான் நாட்டில் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய புயல் ஒன்று ஏற்பட்டுள்ளது. நேற்று அதிதீவிரமாக தெற்கு சீனாவை நோக்கி வீசியபோது, இந்த புயலால் தெற்கு துறைமுக நகரமான காவ்ஷியுங்கில் தன்சானிய கொடியுடன் பயணித்த கப்பலொன்று கடலில் மூழ்கியுள்ளது. அதில் பயணித்த 9 பேர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதுகுறித்து தைவானின் தேசிய தீயணைப்பு அமைப்பின் தலைவர் ஹ்சியாவோ ஹுவான்-சாங் கூறுகையில், ” மாலுமிகள் லைஃப் ஜாக்கெட்டுகளுடன் கடலில் விழுந்து மிதந்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு உதவ மற்றொரு…