ஜப்பானில் கடந்த வருடம் நாயாக மாறிய நபர் தற்போது நரியாக மாற விருப்பம்..!!

மனிதராக இருக்கும் நீங்கள் ரூ.12 லட்சம் செலவு செய்து நாயாக மாறுவீர்களா?.. நமக்கெல்லாம் நாயை பிடித்தாலும் இவ்வளவு செலவு செய்து நாயாக மாறமாட்டோம். ஆனால் கடந்த வருடம் ஜப்பான் நாட்டை சேர்ந்த டோகோ என்ற நபர் ரூ.12 லட்சம் செலவு செய்து நாயாக மாறினார்.  ‘I want to be an animal’ என்ற யூடியூப் சேனலையும் இவர் வைத்துள்ளார்.  இவரின் இந்த செயல் அப்போது பெரும் பேசுபொருளாகியது.தற்போது நாயாக இருக்கும் டோகோ பாண்டா,  கரடி,  பூனை…

மேலும் படிக்க

பெண்ணின் வயிற்றில் துணியை வைத்து தைத்த தனியார் மருத்துவமனை…!!

 திருச்சி மணப்பாறை பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் வயிற்று வலி காரணமாக தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.  அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கருப்பையில் நீர்க் கட்டி இருப்பதாகக் கூறி அறுவைச் சிகிச்சை மேற்கொண்டுள்ளனர்.  அறுவை சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்ற பெண்ணிற்கு தொடர்ந்து வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது.பின்னர் வேறு மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் செய்து பார்த்துள்ளார்.  இதில், அவரது கருப்பை அகற்றப்பட்டதும்,  வயிற்றில் மருத்துவத் துணி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து தனது அனுமதியின்றி கருப்பையை அகற்றியதுடன்,  வயிற்றில்…

மேலும் படிக்க

ஐபிஎல் கோப்பையை கையில் ஏந்தியது போலவே டி20 உலகக் கோப்பையையும் கையிலேந்துவேன் : இந்திய வீரர் ரிங்கு சிங்..!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதின.இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்நிலையில், ஐபிஎல் கோப்பையைப் போல டி20 உலகக் கோப்பையையும் கையிலேந்துவேன் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.நான் முதலில் நொய்டாவுக்கு செல்ல உள்ளேன். அதன்பின்…

மேலும் படிக்க

அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவு 80 ஆண்டுகளுக்குப் பிறகு தென்சீனக் கடற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..!! 

உலக வல்லமை பெற்ற நாடுகளில் பெரும்பாலானவை இந்த போரில் பங்கெடுத்தன.  இதில் 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 10 கோடிக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் நேரடியாகப் பங்கெடுத்தனர். இந்தப் போரில் விமானங்கள் மூலம் மக்கள் தொகை மிகுந்த இடங்கள் மீது குண்டுகள் மற்றும் அணு ஆயுதங்களும் பயன்படுத்தப்பட்டதால்,  7 முதல் 8.5 கோடிப் பேர் இதில் உயிரிழந்தனர்.  இவர்களில் பெரும்பாலானவர்கள் அப்பாவி பொதுமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில், இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் பல போர்க்கப்பல்களை மூழ்கடித்த…

மேலும் படிக்க

ரேசன் கடைகளில் மே மாதத்திற்கான பொருட்களை ஜூனிலும் பெறலாம் ~ தமிழ்நாடு அரசு..!!

இம்மாதத்திற்கான எண்ணெய்,  பருப்பு வாங்காதவர்கள் அதனை ஜூன் மாதம் முதல் வாரம் வரை வாங்கிக் கொள்ளலாம் என உணவுப்பொருள்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.மக்களவை தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக,  ஒப்பந்த புள்ளிகளை இறுதிசெய்து பாமாயில்,  துவரம்பருப்புகளை கொள்முதல் செய்வதில் தாமதமானது. இதனால் மே மாதத்தில் நியாய விலைக் கடைகளில் வழங்கப்பட்ட பொருட்களில் தட்டுப்பாடு ஏற்பட்டது.  இதனால் பெரும்பாலானோருக்கு பொருட்கள் கிடைக்கவில்லை.மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக பாமாயில் மற்றும் துவரம் பருப்புக்கான ஒப்பந்தப்புள்ளிகள்…

மேலும் படிக்க

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!!

மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய தெற்கு வங்க கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, கடந்த 12 மணி நேரத்தில் வடகிழக்கு நோக்கி நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மத்திய வங்கக் கடலில் வலுப்பெற்றது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கேபுபரா (வங்களதேசம்) க்கு சுமார் 800 கிமீ தொலைவிலும், தென்- தென்மேற்கு மற்றும் கேனிங்கிற்கு (மேற்கு வங்கம்) தெற்கே 810 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை காலை…

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் : தேசிய மருத்துவ ஆணையம்..!!

தமிழ்நாட்டில் அரசுக்குச் சொந்தமான மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 5,225 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 3,300 இடங்களும் இருக்கின்றன. மாநிலத்தின் மக்கள் தொகையைப் பொறுத்தவரை, 2011-ம் ஆண்டுக் கணக்கெடுப்பின்போது 7 கோடியே 21 லட்சமாக இருந்தது. தற்போது சுமார் 8 கோடியை கடந்து இருக்கலாம் என கருதப்படுகிறது. தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய விதிமுறைகளின்படி, தற்போது தமிழ்நாட்டில் சுமார் 8,300 எம்பிபிஎஸ் இடங்கள் வரை இருக்கலாம்.இந்நிலையில் தமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தேசிய…

மேலும் படிக்க

தங்கம் விலை பவுனுக்கு ரூ.54,000-க்கு விற்பனை..!!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு கடுமையாக குறைந்த தங்கம் விலை, அக்.4-ம் தேதி பவுன் ரூ.42,280 என்றளவில் விற்பனையானது. இதன் பின்னர் இஸ்ரேல், பாலஸ்தீன போர் எதிரொலியாக அதிகரித்த தங்கம் விலை, தொடர்ச்சியாக உயர்ந்து கடந்த டிச.4-ம் தேதி பவுன் ரூ.47,800 என்னும் புதிய உச்சத்தை அடைந்தது.கடந்த மார்ச் 28-ம் தேதி ஒரு பவுன் ரூ.50 ஆயிரம் என்ற வரலாறு காணாத உயர்வை எட்டியது….

மேலும் படிக்க

ஆஸ்கர் நூலகத்தில் ‘பார்க்கிங்’ திரைக்கதை..!!

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் பார்க்கிங். இந்த படம் கடந்த ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்றது.இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண்,  எம்எஸ் பாஸ்கர் இடையே ஏற்படும் சின்ன ஈகோ பிரச்சனை எவ்வளவு பெரிய பிரச்சனையாக மாறும் என்பது மிகவும் உணர்வு பூர்வமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.  சுமார்…

மேலும் படிக்க

தைவானின் கின்மென், மாட்சு மற்றும் டோங்கி தீவுகளை சுற்றியுள்ள பகுதிகளில் சீனா 2-வது நாளாக போர் பயிற்சி..!!

சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-ம் ஆண்டு தனிநாடாக பிரிந்தது.  ஆனால் தைவானை இன்னும் தங்களது நாட்டின் ஒரு அங்கமாகமே சீனா கருதுகிறது.  எனவே தைவானை மீண்டும் தன்னுடன் இணைத்துக் கொள்ள சீனா முயற்சிப்பதாக கூறப்படுகிறது.  இதனால் தைவான் எல்லையில் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பி,  சீனா அவ்வப்போது போர்ப்பதற்றத்தை ஏற்படுத்துகிறது.இந்த நிலையில்,  தைவானில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அதிபா் தோ்தலில் சுதந்திரத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்ட ஜனநாயக முன்னேற்ற கட்சியின் லாய் சிங்-டே வெற்றி…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram