தைவான் நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 200க்கும் மேற்பட்ட முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்..!!

 சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று இன்று ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது என அந்நாட்டின் மத்திய வானிலை ஆய்வு நிர்வாகத்தின் நிலநடுக்க அறிவியல் மைய இயக்குநர் வூ சீன்-வு இன்று தெரிவித்துள்ளார்.ஹுவாலியன் கவுன்டி பகுதியில் நேற்று மாலை 3.08 மணி முதல் இன்று மதியம் 1.30 மணி வரையில் மொத்தம் 247 நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளன என அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கின்றது. இதேபோன்று. கடந்த 3- ந்தேதியில் இருந்து இதுவரை பதிவான நிலநடுக்கங்களின்…

மேலும் படிக்க

நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் வைப்பு நிதியாக ரூ. 50 லட்சத்திற்கான காசோலையை வழங்கி உள்ளார்..!!

பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் நிதிப் பற்றாக்குறை காரணமாக நிறைவு பெறாமல் இருந்தது. இந்தப் பணி நிறைவு பெற வங்கியில் ரூ.40 கோடி கடன் வாங்க ஒப்புதல் வாங்கியிருப்பதாக சங்க பொருளாளர் கார்த்தி 67வது சங்க பொதுக்குழுக் கூட்டத்தின் போது தெரிவித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து நடிகர் சங்க புதிய கட்டடம் முழுமையாக கட்டி முடிக்க அமைச்சர் உதயநிதி நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினர் என்ற முறையில் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார். பின்பு சங்கத்தின் அறக்கட்டளை…

மேலும் படிக்க

கடற்படை ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து..!!

மலேசியா நாட்டின் பேராக் அருகே லுமுட் எனும் பகுதியில் கடற்படைக்கு சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் சிக்கி 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பேராக் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் இந்த சம்பவத்தை உறுதி செய்துள்ளனர். சம்பவ இடத்திலேயே 10 பேரும் உயிரிழந்ததை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.மலேசிய கடற்படை தினத்தின் 90ம் ஆண்டு நிகழ்ச்சிக்காக நடந்த ஒத்திகையின்போது இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது. விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள்…

மேலும் படிக்க

கோடை காலத்தில் நம்மை பாதிக்கும் நோய்களை பற்றி இங்கு காணலாம்..!!

கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது.  வெயிலினால் வியர்வை,  நீரிழப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.  மழைக்காலத்தில் மட்டுமே நோய்கள் பரவும் என்றில்லை.  வெயில் காலத்திலும் பல்வேறு உடல் நலக்குறைபாடுகள் ஏற்படுவதுண்டு.  அதன்படி, கோடை காலத்தில் நம்மை பாதிக்கும் நோய்களை பற்றி இங்கு காணலாம்.மிக அதிகமான வெப்பத்தை உடலால் தாங்க முடியாமல் போகும் போது ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுகிறது.  வாந்தி மற்றும் குமட்டல்,  வலிப்பு, …

மேலும் படிக்க

உலகப் புகழ் பெற்ற மோனாலிசா ஓவியம் ராப் பாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது..!!

உலக அளவில் இன்றும் பேசப்படுவது மோனாலிசா ஓவியம்.  இந்த ஓவியம் 16-ம் நூற்றாண்டில் லியோனார்டோ டா வின்சி எனவரால் பொப்லார் பலகையில் வரையப்பட்டதாக கூறப்படுகிறது.  மோனாலிசா ஓவியத்திற்கு லா ஜியோகொண்டா ஓவியம் என்ற பெயரும் சொல்லப்படுகிறது.  இது ஒரு எண்ணெய் வண்ண ஓவியம் ஆகும். உலக அளவில் புகழ்பெற்ற ஓவியங்களில் மோனாலிசா ஓவியமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.இந்த ஓவியம் லூவர் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது.  இந்த ஓவியம் பிரான்சிஸ்கோ டெல் கியோகாண்டோவின் மனைவி லிசா கிரர்த்தினியின் உருவப்படம் என்றும், …

மேலும் படிக்க

‘ஸ்டார்’ திரைப்படத்தின் ‘மெலோடி’ பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது..!!

‘டாடா’ விற்கு பின் கவின் நடிக்கும் திரைப்படம் ‘ஸ்டார்’.  இந்த படத்தை ‘பியார் பிரேமா காதல்’ படத்தை இயக்கி பிரபலமான இளன் இயக்கியுள்ளார்.  இந்த படத்தில் லால், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உட்பட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை பி.வி.எஸ்.என்.பிரசாத், ஶ்ரீநிதி சாகர் ஆகியோர் தயாரித்துள்ளனர்.  இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.ஸ்டார் படத்தின் மேக்கிங் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.  இத்திரைப்படத்தின் விண்டேஜ் லவ் பாடல் சமீபத்தில் வெளியாகி…

மேலும் படிக்க

பிரேசிலில் பெண் ஒருவர் மரணமடைந்தவரை வங்கிக்குக் அழைத்து சென்று கடன் பெற முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..!!

பிரேசிலில் பெண் ஒருவர், தனது 68 வயதான உறவினரை வங்கிக்கு சக்கர நாற்காலியில் அழைத்து வந்து, அவரது பெயரில் கடன்பெற முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், அவர் சக்கர நாற்காலியில் வரும்போதே தலை தொங்கியிருந்தபடியால், காவல்துறையினர் விசாரணை நடத்தி உள்ளனர். இந்நிலையில், காவல்துறை நடத்திய விசாரணையில், அந்த நபர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிய வந்தது. ரியோ டி ஜெனிரியோ வங்கி ஊழியர்கள், அவசர உதவி சேவை மையத்தைத் தொடர்புகொண்டு உதவிக்கு அழைத்தனர். அப்போது, கடன்…

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் மதியம் 1 மணி வரை 40.05 சதவீதம் வாக்கு பதிவாகின..!!

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது.  அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும்,  புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  சரியாக காலை 7…

மேலும் படிக்க

பிரபல ஹாரி பாட்டர் தொடரின் கற்பனை வில்லன் லார்ட் வோல்ட்மார்ட்டை ஒத்திருக்கக்கூடிய ஒரு எறும்பு இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்..!! 

பிரபல ஹாரி பாட்டர் தொடரின் கற்பனையான வில்லன் லார்ட் வோல்ட்மார்ட்டை ஒத்திருந்தது.   இந்த எறும்பு இனம் மெல்லியதாகவும்,  வெளிர் நிறமாகவும் காணப்படுகிறது.  மேலும் இவை நிழலில் வாழக்கூடியவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.  வடமேற்கு ஆஸ்திரேலியாவின் பில்பரா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த இனத்தின் பெயர் லெப்டானிலா வோல்ட்மார்ட்.மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தின் டாக்டர் மார்க் வோங் மற்றும் பென்னலோங்கியா சுற்றுச்சூழல் ஆலோசகர் ஜேன் மெக்ரே ஆகியோர் இந்த எறும்பு இனம் பற்றிய ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.    டாக்டர் மார்க் வோங்  இதன்…

மேலும் படிக்க

தமிழகத்தில் 6  மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..!!

 தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திண்டுக்கல், திருநெல்வேலி மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்ப நிலை 36-37 டிகிரி செல்சியஸ் முதல் குறைந்த பட்ச வெப்ப நிலை 26-27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram